கோவை மத்திய சிறையில் இருந்த போக்சோ கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயது போக்சோ கைதி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். சர்க்கரை மற்றும் நரம்பியல் பிரச்சினைகளால் அவதிப்பட்ட கைதி, தீவிர சிகிச்சைக்கு பிறகும் உயிரிழந்தார்.


Coimbatore: கோவை மத்திய சிறையில் இருந்த போக்சோ கைதி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் (66) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டு சிறை தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த அவர் சர்க்கரை மற்றும் நரம்பியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேல் சிகிச்சைக்காக செப்டம்பர் 6 அன்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கருப்பண்ணனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக சிறை வார்டன் லதா, ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...