கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம்: 2026 தேர்தலுக்கான தயார்நிலை வலியுறுத்தல்

கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிர செயல்பாடு தேவை என வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கலந்து கொண்டார். அவர் தனது உரையில், "2026 சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



கூட்டத்தில் தி.மு.கழக மூத்த உறுப்பினர்களுக்கு கேடையம் வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் TP சுப்பிரமணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும், அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் சங்கர், ஈஸ்வரன், கண்ணகி, பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், கல்யாணசுந்தரம், சுனில்குமார், பிரபாகரன், வட்ட செயலாளர்கள் குட்டி வேலுச்சாமி, ரமணன், தனராஜ், காளிதாஸ், குமரேசன், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் அ.தி.மு.க நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் தி.மு.கவில் அனைவர் முன்னிலையிலும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வு கட்சியின் வளர்ச்சியையும், அடுத்த தேர்தலுக்கான தயார்நிலையையும் காட்டுவதாக அமைந்தது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...