மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மேயர் தலைமையில் 65 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 65 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 65 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன.

மண்டல வாரியாக பெறப்பட்ட மனுக்களின் விவரம்:

கிழக்கு மண்டலம் - 8 மனுக்கள்

மேற்கு மண்டலம் - 9 மனுக்கள்

வடக்கு மண்டலம் - 10 மனுக்கள்

தெற்கு மண்டலம் - 8 மனுக்கள்

மத்திய மண்டலம் - 19 மனுக்கள்

பிரதான அலுவலகம் - 11 மனுக்கள்

மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



கூட்டத்தின் போது, தெற்கு மண்டலம் வார்டு எண் 93-க்குட்பட்ட இடையர்பாளையம், குனியமுத்தூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த உன்னி என்பவரின் மகளின் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டதற்கான ஆணையை மேயர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் குமார், தலைமைப்பொறியாளர் செந்தில்குமரன், முருகேசன், உதவி மாநகர துணை ஆணையர்கள் முத்துசாமி, சந்தியா, மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...