சிங்காநல்லூரில் ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஆணையங்காடு சாலையில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி 61-வது வார்டுக்குட்பட்ட ஆணையங்காடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் இன்று (செப்டம்பர் 13) திறந்து வைத்தார்.



சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



திறப்பு விழா நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவகுமார், வட்டக் கழக செயலாளர்கள் பாலமுருகன், சசிகுமார், பக்ருதீன், மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, கைத்தறி முத்துசாமி, சிங்கைபாலன், எஸ் ஆர் ரவி, சிங்கை வசந்தி, ஜெயகோபால், குமரேசன், நல்லதம்பி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...