பள்ளேபாளையம் அருகே குட்டையில் இரண்டு முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பள்ளேபாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு முதலை தென்பட்ட நிலையில், தற்போது அதே குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இது குறித்த தகவல் சிறுமுகை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு தினங்களாக வனத்துறையினர் முதலைகள் உள்ள குட்டையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முதலைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து, அவற்றை கண்காணித்தும் வருகின்றனர்.

விரைவில் அந்த குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...