கூடலூர் நகராட்சியில் DRO திடீர் ஆய்வு: காலை உணவுத் திட்டம், சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் வசதிகளை பரிசோதித்தார்

கூடலூர் நகராட்சியில் DRO டாக்டர் ஷர்மிளா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், துணை சுகாதார நிலையம், குடிநீர் வசதிகள் மற்றும் பள்ளி கழிப்பிடங்களை பரிசோதித்தார்.


கோவை: கூடலூர் நகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) டாக்டர் ஷர்மிளா இன்று (செப்டம்பர் 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



DRO டாக்டர் ஷர்மிளா முதலில் கூடலூர் நகராட்சியின் தெற்கு பாளையத்தில் செயல்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவு கூடத்தை பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்த DRO, குடிநீரின் தன்மை குறித்து விசாரித்தார். மேலும், அருகிலுள்ள தொடக்கப்பள்ளியின் கழிப்பிடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து கேள்விகள் எழுப்பினார்.



இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்களான முருகானந்தம், துரை செந்தில், மாடசாமி, பாலசுப்பிரமணியம், ஜனார்த்தனன், பேங்க் முருகேசன், எஸ் ஆர் பி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...