கோவை மாநகராட்சி ஆணையாளர் பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வார்டு 1-ல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், வார்டு 5-ல் சாலை சீரமைப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (செப்டம்பர் 20) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முதலில், வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 1-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கேப்டவுன் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் கிழக்கு மண்டலத்தின் வார்டு எண் 5-க்குட்பட்ட விஸ்வாசபுரம் பகுதிக்குச் சென்றார். அங்கு நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், இப்பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...