கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா: 2644 மாணவர்களுக்கு பட்டம்

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர். டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா 21.09.2024 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



விழாவில் தமயந்தி வசந்தகுமார், முதன்மைச்செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் டாக்டர் ப.வெங்கடாசலபதி, பதிவாளர் முனைவர் சு.இரவி, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தைரோகேர் அமைப்பாளர் டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.



அவரது உரையில், "பண்பட்ட கல்வியே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை. தனிமனித ஒழுக்கத்திலும், சமுதாயப் பொறுப்புணர்விலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்த மாணவர்கள் உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கின்றனர். அவர்களது பெருமுயற்சிக்கு கல்வியே தலைச்சிறந்த கருவி. நாட்டின் உயர்வே அவர்களது கல்வியின் பெரும்பயன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "மாணவர்கள் அத்தகைய பொதுநல நோக்கத்துடன் சிறந்த ஆளுமைகளாக மிளிர வேண்டும். புதிய கல்விக்கொள்கை முதலானவை திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் துணைசெய்வதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்கள் தமது ஆய்வுப்பங்களிப்பின் வாயிலாக நாட்டின் அனைத்துத் துறைச்சார்ந்த வளர்ச்சிக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய மாணவர்களின் அறிவும், ஆளுமையும் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் A.வேலுமணி, "மாணவர்கள் இதனை உணர்ந்து அடிப்படைக் கல்வி, மருத்துவம் முதலானவற்றுடன் அறிவியல் ஆக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு பொதுநல நோக்கத்தில் உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.





இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.





அதில் 51 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த 52 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...