நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

திருமலையம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் ரமேஷ்குமார், நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பள்ளி விதிமீறல்கள் மற்றும் வரி செலுத்தாமை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: திருமலையம்பாளையம் பேரூராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் ரமேஷ்குமார், நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேரு காலேஜ் ஆப் எஜுகேஷன் & சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வரும் நேரு ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆகிய தனியார் சுயநிதி கல்லூரிகள் 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

இதே கல்வி குழுமம் நேரு இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2016-17இல் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விதிகளை மீறி கூடுதலாக கட்டிடங்களை அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக சுயநிதி பள்ளியை நடத்தி வருகிறது.

இந்த தனியார் சுயநிதி பள்ளிக்கு கடந்த 7 ஆண்டுகளாக சொத்துவரி விதிப்பு செய்யாமலும் வரி செலுத்தாமலும் உள்ள நிலையில், தற்போது இப்பள்ளிக்கு மூன்றாம்தளம் மற்றும் நான்காம் தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் இணைய வழி ஒப்புதல் வழங்கியிருப்பது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு மற்றும் விதிமீறல் ஆகும்.

எனவே, விதிகளை மீறி கட்டிடங்களை அமைத்துள்ள மேற்படி தனியார் சுயநிதி பள்ளியை ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தி, 7 ஆண்டுகளுக்கான உரிய சொத்து வரியை செலுத்தும் வரை மூன்றாம்தளம் மற்றும் நான்காம்தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய இணைய வழி ஒப்புதலை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ்குமார் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...