கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சியை நடத்தியது. இதில் 28 பயணிகள் மற்றும் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்ததாக பாவனை செய்யப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் இணைந்து 'பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி'யை இன்று நடத்தியது. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்று, ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார்.

பேரிடர்காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் 'கோல்டன் ஹவர்" என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.



இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் இருபத்தெட்டு பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டது. பின்னர் பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, "மஞ்சள் குறியீடு" (Code Yellow) அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு, உள் ட்ரைஜ் குழு, கார்டன் குழு, சால்வேஜ் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அடுத்தடுத்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் என அனைத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக ஒத்திகை செய்யப்பட்டது.



இந்த ஒத்திகை பயிற்சி விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒத்திகை பயிற்சியில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரிகள், கோவை ரயில் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என பலர் ஈடுபட்டனர். தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இந்த பரபரப்பான ஒத்திகை காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் உற்று நோக்கினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...