மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். நிலை கட்டணம், டிமாண்ட் சார்ஜ் 50 சதவீதம் குறைப்பு, ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு தொடர்பான வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரதீப், மறுசுழற்சி ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால், தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா, ரயில்வே விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுருளி வேல் ஆகியோர் இதுகுறித்து விரிவாக கூறியுள்ளனர்.




அவர்கள் கூறியதாவது: 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் தொடங்கி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, அதிக GST வரி விதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி துறை சார்ந்த MSME தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.






இந்தியாவில் 47 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உள்ளிட்டவை உலக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.




இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டு சந்தையில் இதர 10 போட்டி மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள நிலை கட்டணம் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இரண்டையும் 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.






அதேபோல் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி தொழில் முனைவோருக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம் நீக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.




ஏற்கனவே மூலப் பொருட்கள் விலை உயர்வை உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் 8 கட்ட போராட்டம் நடத்தப்பட்ட போதும் மின்கட்டணம் குறைக்கப்படவில்லை.



எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் மின்கட்டண குறைப்பு உள்ளிட்ட மின்சார துறை சார்ந்த தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் முடிவு சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...