சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குச் சேகரிப்பு மேற்கொண்டார். குழந்தைக்கு துதித்ரா என பெயரிட்டு மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்தினார்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram சிங்காநல்லூர் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நந்தா நகர், திருக்குமரன் நகர் எக்ஸ்டென்ஷன், திருக்குமரன் நகர், SRD லேஅவுட், டெக்ஸ்டைல் லேஅவுட் போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.






வாக்குச் சேகரிப்பின்போது AIADMK அரசின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பகுதி மக்கள் வேட்பாளர் K R Jayaram-க்கு மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.




சிறப்பு அம்சமாக MGR வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த K R Jayaram மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் தமிழக மக்களின் அன்பிற்குரிய தலைவர் MGR-ன் நினைவை மீட்டெடுத்து மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார்.




அப்பகுதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்ட வேட்பாளரிடம் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று K R Jayaram குழந்தைக்கு 'துதித்ரா' என பெயரிட்டு ஆசி வழங்கினார். இந்த செயல் மக்களிடம் அவருக்கான நெருக்கத்தை மேலும் அதிகரித்தது.




வாக்குச் சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர்கள் சசிகுமார், சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், AIADMK நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் பங்கேற்றனர்.




தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளரின் பல்வேறு முயற்சிகள் கட்சிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...