பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதையொட்டி கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore:தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) மாலை 6 மணி அளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.



இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.



இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையில் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும் பிரதமரின் உரையை தெளிவாக காணும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் மற்றும் மின்விளக்குகள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகையை கருத்தில் கொண்டு வாகனங்களை நிறுத்துவதற்காக மைதானத்திற்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையின் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, காந்தி மாநகர், நேருநகர், சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்கள் பறக்க விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்.17) மாலை 5 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் அல்லது பிற வான்வெளி ஊர்திகளைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி விமான நிலையச் சாலை மற்றும் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையப் பகுதிக்குள் தனியார் வாகனங்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விமான நிலையம், சிட்ரா, கொடிசியா மைதானம் உள்ளிட்ட பகுதிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...