இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்து, போலீசாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Coimbatore: கோவை இருகூரை சேர்ந்த தூய்மைப்பணியாளர் பாரதிராஜாவின் மகன் ரித்தீஷ் (13), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தார்.

கடந்த 15-ஆம் தேதி, ரித்தீஷ் தனது நண்பர்களான 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுடன் இருகூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், 10-ம் வகுப்பு மாணவர் பாட்டிலால் ரித்தீஷின் தலையில் தாக்கியதுடன், கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ரித்தீஷை யாரோ கடத்திச் சென்றதாக 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் நாடகமாடியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கொலையில் தொடர்புடைய 10-ம் வகுப்பு மாணவரையும், அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 8-ம் வகுப்பு மாணவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் கோவை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு செல்வது கவலைக்கிடமானது என்றும், பெற்றோரும் ஆசிரியர்களும் சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் ரித்தீஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் பகுதி உதவி ஆணையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ஆணைய உறுப்பினர் செல்வகுமார் கூறுகையில், “7-ம் வகுப்பு மாணவர் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை கொலை செய்ததுடன், அதை மறைக்க யாரோ கடத்திச் சென்றதாக பெற்றோரையும் நம்ப வைத்துள்ளனர்.

எதற்காக இந்த கொலை நடந்தது? மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட காரணம் என்ன? கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் சென்றதற்கு பின்னணி என்ன? என்பது தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் ஜூன் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...