வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுடன் சுற்றுலா வந்த அவர், அணை ஓரத்தில் கை கால் கழுவும்போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். தமிழ்நாடு மற்றும் கேரளா தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள அம்பலபார அணையில் (கீழ் சோலையாறு அணை) நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு இளைஞர் மூழ்கி காணாமல் போன சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.






வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜா, குமாரி தம்பதியரின் மகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கூடலூர் அத்திக்குனா பகுதியிலிருந்து அவர்களது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், நேற்று மாலை தங்களது ஊருக்குத் திரும்ப முடிவு செய்தனர்.




இந்நிலையில், நேற்று மதியம் உறவினர்கள் சுமார் 6 பேர் குடியிருப்பு அருகே உள்ள அம்பலபார அணைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அணையின் அழகை ரசித்துவிட்டு வரலாம் என்ற நோக்கத்துடன் அவர்கள் அங்கு சென்றனர். அவர்களில் தனுஷ் (வயது 21) என்ற இளைஞரும் இருந்தார். அவர் BSC (CS) படிப்பை முடித்திருந்தாலும், இன்னும் வேலைக்குச் செல்லவில்லை.




அணையின் ஓரத்தில் அனைவரும் தண்ணீரில் கை கால் கழுவினர். திடீரென்று தனுஷ் தண்ணீரில் மூழ்கி காணாமல் போய்விட்டார். உடன் வந்தவர்கள் பதறிப்போய், உடனடியாக வால்பாறை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.




தகவல் கிடைத்தவுடன், வால்பாறை தீயணைப்புத் துறையினரும், சோலையார் அணை காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அணை பெரிய அளவில் இருப்பதால், உடலை மீட்பது சிரமமாக இருக்கும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.




திருமண விழாவிற்கு வந்த உறவினர் குடும்பத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கேரளா மாநில காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




இரண்டாவது நாளாக தமிழ்நாடு வால்பாறை தீயணைப்பு துறையினரும், சோலையார் அணை காவல்துறையினரும் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் உடல் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...