கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழாவில் 351 மாணவர்களுக்கு பட்டங்கள்

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 351 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 14 மாணவர்கள் தங்க மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்றனர். UPS இந்தியா Dr. சுப்ரமணி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கற்பகம் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சேக்கிழார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 351 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






இதில் 7 பட்டதாரிகளுக்கு தங்க பதக்கமும், 7 பட்டதாரிகளுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டு அவர்களின் கல்வி சாதனைகள் கௌரவிக்கப்பட்டன. விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் தலைமை தாங்கினார்.




விழாவின் சிறப்பு விருந்தினராக UPS இந்தியா டெக்னாலஜி சென்டர் நிறுவனத்தின் துணைத் தலைவர் Dr. சுப்ரமணி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் K. முருகையா மற்றும் கல்லூரி முதல்வர் Dr. P. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




இவ்விழாவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். பட்டதாரிகள் தங்களின் கல்வி பயணத்தின் மைல்கல்லை கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...