கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிழக்கு மகளிர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (34), கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தில், அவர் வகுப்பில் பயின்று வந்த சில மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அவர் தொடர்ந்து ஆபாசப் பதிவுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் செல்போன்களை பெற்றோர் தற்செயலாக சோதனை செய்தபோது, ஆசிரியர் அனுப்பியிருந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆசிரியர் பாபுவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டதில், மாணவர்களுக்கு ஆபாசப் பதிவுகள் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியகுற்றச்சாட்டின் பேரில், கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கோடை விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி டியூஷன் மற்றும் வகுப்புகள் மூலம் நெருக்கமாக பழகிய மாணவர்களைக் குறிவைத்து அவர் இந்தச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...