கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 செலுத்தி பங்கேற்கலாம். காளான், வாழைப்பூ, பாகற்காய் உள்ளிட்ட ஊறுகாய்கள் மற்றும் பல்வேறு மசாலா பொடிகள் தயாரிக்கும் முறை கற்பிக்கப்படும்.
Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் பாரம்பரிய ஊறுகாய்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி திட்டம் வரும் ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விரிவான பயிற்சியில் சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா பொடி உள்ளிட்ட பல்வேறு மசாலா பொடிகள் தயாரிக்கும் முறைகள் கற்றுத் தரப்படும். மேலும், தயார்நிலை பேஸ்ட் தயாரிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
ஊறுகாய் தயாரிப்பு பிரிவில், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகியவற்றை தயாரிக்கும் நவீன மற்றும் பாரம்பரிய முறைகள் நடைமுறை பயிற்சியுடன் வழங்கப்படும். இது சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கும், வீட்டுத் தொழில் நடத்துவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1,500 + GST 18%) கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை பயிற்சி முதல் நாளன்று GPAY மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கும், பதிவுக்கும் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 94885-18268, 0422-6611340.