ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் 28 புதிய எழுத்தாளர்களின் 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இந்த உலக சாதனைக்காக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் கோயம்புத்தூர், ஞான சஞ்சீவனம் குருகுலம் ஆகியவை இணைந்து நடத்தும் லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனைக்கான மாபெரும் புத்தக வெளியீட்டு விழா (25.07.2026) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

 நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை, ஸ்கை நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஸ்கை வி.சுந்தரராஜ் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 அதைத் தொடர்ந்து, புத்தக வெளியீட்டில் ஒரு சாதனை நிகழ்ச்சியாக, “ஞான அவதாரம்” எனும் பொருண்மையில் முதன்முறையாகப் படைப்புகளை வெளியிடும் 28 எழுத்தாளர்கள் எழுதிய 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதனோடு இன்னும் சில முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் மொத்தமாக 35 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேபோல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த விருதினைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.விஸ்வநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் செயலர் மற்றும் கோவை, ரூட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெடின் இயக்குநருமான டாக்டர் கவிதாசன் அவர்கள் “எழுத்து தவம்! வாசிப்பு வரம்! என்னும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை வழங்கினார். 

 பின்னர், கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், மெய்ஞ்ஞானப் பேச்சாளர் ஸ்ரீ சசிகுமார் நூல்களுக்கான ஏற்புரை வழங்கினார். 

 நிகழ்வில் முன்னதாக, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் த.விஸ்வநாதன் வரவேற்றார். நிறைவாக, கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், ஸ்ரீ சசிகுமார் நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...