கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீது, கோவை மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை:
கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இளைஞர் மீது, கோவை மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி, கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இ. கிஷோர் (22) என்பவர், கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்ததுடன், அதை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவரது நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும், பொது ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதிய காவல்துறை, அவரை கைது செய்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தது.
இதனைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரின் பரிந்துரையின் பேரில், கிஷோரை மருந்து சரக்கு குற்றவாளி (Drug Offender) என வகைப்படுத்தி, கோவை மாநகர காவல் ஆணையர்டாக்டர் ந. கண்ணன், உத்தரவின்படி, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.