கோவை ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் சிலர் ஏமாற்றி பயணிப்பதாக கோவை ரயில் நிலைய காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆழப்புழா செல்லும் ரயிலில் இருந்த மாற்று திறனாளிகள் பெட்டியில் 10 க்கும் மேற்பட்டோர் ஏமாற்றி பயணிப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களை பிடித்த ரயில்வே காவல்துறையினர் ஒவ்வொருவருக்கும் தலா 500 அபராதம் விதித்தனர்.

