சீட் கிடைக்காத விரக்தி.. அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.  இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது அதிமுக தலைமை.

தூத்துக்குடி நகராட்சி தேர்தலில் 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் தற்போதைய கவுன்சிலர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பல்வேறு வார்டுகளில் போட்டி வேட்பாளர்களாக அதிமுக-வினர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் கடந்த தேர்தலில் 3வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மண்டல பகுதி இணைச்செயலாளர் கோகிலா மேற்கு பகுதி அவைத்தலைவரான சந்தானம், 49வது வார்டு வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட வட்ட பிரதிநிதியான ரமேஷ் ஆகியோர் அதிர்ப்தி அடைந்தனர்.

இதனையடுத்து, தங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர்கள் 3 பேரும் திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...