முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது வழக்கு

முதல்வர் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாக, பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலர். இவர் மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனு விவரம்: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் தமிழ்ப் பெண்ணான தமிழச்சி என்பவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.

இதுதமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கத்தையும், அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அவதூறான தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி மீது இணையதள குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரைப் பெற்றுக் கொண்ட மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...