கோவையிலுள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


உலக முழுவதும் உள்ள சீக்கிய மக்கள் வரும் ஜனவரி 5ம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா இம்மாதம் 28ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதிவரை கொண்டாடவுள்ளனர். சீக்கிய மதகுரு மக்கள் ஒன்றிணைந்து ஜனவரி 1ம் தேதி அன்று குருத்வார சிங் சபாவில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் மூலம் ஊர்வலமாக கொண்டு  அப்பகுதியை சுற்றி மீண்டும் குருத்வார சிங் சபாவிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்னர், ஜனவரி 2ம் தேதி குருத்வார சிங் சபாவில் ராஹி ஜாத பாய், குருப்ரீத் சிங், பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனை பக்தி பாடல்கள் மாலை 7:30 மணி முதல் 9:30 நடைபெறவுள்ளது. ஜனவரி 4ம் தேதி சீக்கிய குரு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து குருத்வார சிங் சபாவில் ஜனவரி 3-5ம் தேதி வரை சீக்கிய குருமார்கள் குரு கரந்த் சாஹிப் புனித நூல் படித்தல், மற்றும் இறுதிநாளில் குருநானக் கீர்த்தனா மண்டல் சார்பில் கீர்த்தனைகள் இசைக்கப்படவுள்ளது. மேலும் ஜோஹிந்தர் சிங், திலோக் சிங், ராஹி ஜாதா மற்றும் பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவையில் 1970ல் சீக்கிய மதத்திற்க்காக கோவில் கட்டப்பட்டது. இன்று குருத்வார சிங் சபா உறுப்பினர்களாக 60க்கும் மேற்பட்டோர் உள்ளனர். குருத்வார சிங் சபா 2017ம் ஆண்டுடன் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...