மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி 'டிஐஇ ' அமைப்பின் கோவை மண்டல தலைவர் கருத்து.


மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் தேசிய ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு ஒதுக்கீடு செய்திருப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். வேலை வாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தும்' என ''டிஐஇ ' (TiE) அமைப்பின் கோவை மண்டல தலைவர் கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட் குறித்து பேசுகையில்:

'ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் லாபத்திற்கு முதல் 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரி கட்ட தேவையில்லை என்பதில் தற்போது முதல் 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரி கட்ட தேவையில்லை என்று மாற்றம் கொண்டு வந்திருப்பது நல்ல அம்சம்.

ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ரூ.2 கோடி வரை விற்பனை செய்யும் சிறு தொழில் அமைப்புக்கள் உத்தேச வருமானமாக விற்பனயில் 8% கணக்கிட்டு அதற்கு வரி செலுத்த முடியும். இதை டிஜிட்டல் முறையிலொ வங்கிக் கணக்கு மூலமாகவோ செய்யப்பட்டால் 6% மட்டுமே வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரி செலுத்தினால் போதும். ரூ.2 கோடி வரை விற்பனை உள்ளவர்களுக்கு கட்டாயத் தணிக்கை இல்லை. நீண்ட கால சொத்து லாபக்கணக்கீடு 3 ஆண்டுகளுலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது நல்ல பலன் தரும்.

ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வருமான வரி 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கூடுதலாக 10% உபரிவரி செலுத்த வேண்டும். வருமான வரி விகிதத்தைக் குறைத்திருக்கலாம்.

வருமான வரிச் சேமிப்புத் திட்டத்தின் அதிகபட்ச அளவை உயர்த்தாதது ஏமாற்றம். கருப்புப்பணத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில்எ டுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் ரூ.2000 மேல் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும். இதற்கான ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும். டிஜிட்டல் முறையில் நடைபெறப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவைக்கட்டணத்தை முற்றிலும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...