கரும்புக்கடை பகுதியில் நூலகம், வங்கி சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கோரிக்கை


கோவை உக்கடம் பகுதியை அடுத்து அமைந்துள்ளது கரும்புக்கடை பகுதி. கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் நூலகம், வங்கிச்சேவை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக அந்த அமைப்பின் கோவை மாநகர செய்தித்தொடர்பாளர் அப்துல் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

கரும்புக்கடை பகுதியில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடங்குவர். நாடு முழுவதும் வங்கி மயமாக்கப்பட்டுவரும் இந்த நேரத்தில் கரும்புக்கடை பகுதியில் வங்கி வசதி இல்லை. வங்கிச் சேவைகளை பெற டவுன்ஹால், குனியமுத்தூர் அல்லது போத்தனூர் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் தேசிய மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் தொடங்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் ஏழ்மை வர்கத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில், இங்கு அரசு பள்ளியாக ஒரு தொடக்கப்பள்ளியே உள்ளது. உயர் கல்வி பெற தனியார் கல்வி நிலையங்களை நாடிச்செல்ல தயங்கும் இப்பகுதி மக்களின் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு செயல்படும் தொடக்கப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

அதே போல் மாணவர்கள் பயன்பெற இங்கு நூலக வசதியும், குழந்தைகளுக்கு பூங்கா வசதியும், பெண்கள் மற்றும் கர்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையமும் அமைத்து தர வேண்டும்.

கோவையின் மையப்பகுதி என்பதால் இப்பகுதியில் எந்த நேரமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருக்கும் கரும்புக்கடை பகுதியில் போதிய வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு முன்வர வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...