கோனியம்மன் திருத்தேர் வெள்ளோட்ட விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் சார்பாக 2017-ம் ஆண்டு 13.02.2017 அன்று திருத்தேர் வெள்ளோட்ட விழாவும் மற்றும் 21.02.2017 முதல் 06.03.2017 வரை திருவிழா நடைபெறும்பொழுது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்; 

அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்டத்தின் போதும் திருத்தேர் விழாவின்போதும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் காவலர்கள் கொண்ட பாதுகாப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. திருக்கோவிலில் பாதுகாப்பு காரணத்திற்காக உலோக தடுப்பு கருவி பொருத்தப்பட உள்ளது. தேர் வடம் பிடிக்கும் பகுதியினைச் சுற்றி பொதுமக்களுக்க எந்தவித இடையூறுகள் ஏற்படாத வண்ணம்  பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், சாதாரண உடையில் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பேருந்துகள், இதர வாகனங்களின் வருகையை தேர் செல்லும் பாதையிலிருந்து மாற்று பாதையில் விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தீயணைப்பு வாகனம் ஒன்றினை தயார் நிலையில் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கவும், மற்றொரு வாகனத்தை வெள்ளோட்ட நாளிலும், தேரோடும் நாளிலும் தேருடன் செல்ல தயார் நிலையில் வைத்திருக்கவும் ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நாளான 13.02.2017 அன்றும், திருத்தேரோட்ட நாளான 01.03.2017 அன்றும் மருத்துவக்குழு முதலுதவி வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து தேரோட்டம் முடியும் வரை தேருடன் செல்லவும், தேவைப்படுவேருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கவும் தயார் நிலையில் அமைக்கப்பட உள்ளது.

 

திருக்கோயில் நிகழ்ச்சியின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தக்கநடவடிக்கைகள் மேற்கொண்டு தேர் செல்லும் ரத வீதியில் தேர் புறப்படுவதற்க்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் தெளிக்க கோவில் நிர்வாகத்தினருடன் கலந்து தக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. போதிய அளவு குடிநீர் வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திருத்தேரேட்ட நிகழ்ச்சியில் தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்பு ஒயர்கள் இருந்தால் தேர் வரவுள்ள பாதையில் இரண்டு மணி நேரத்திற்க்கு முன்பாகவே தற்காலிகமாக அகற்றியும், திருவிழா நாட்களில் திருக்கோவிலில் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேர் செல்லும் பாதைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீர்படுத்தி சாலை  செப்பனிடப்பட்டுள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நாளான 13.02.2017 அன்றும் 28.02.2017,01.03.2017 ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றிட வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தி மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சிதம்பரம், கோட்டாட்சியர் மதுராந்தகி, கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் விமலா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர் சந்திரன், வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...