தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” "15-2-2017 மற்றும் 16-2-2017" ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும். 

•நெல்லி  பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்.

•நெல்லி ஜாம், அல்வா மற்றும் பட்டர்.

•கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல்.

•தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள்.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500- (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரைப் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள் பயிற்சி கட்டணத் தொகையை வரைஓலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) பெறத்தக்க வகையில் (Payable at Coimbatore) எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவு செய்து கொள்ள இறுதி நாள் பிப்ரவரி 15,2017. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள் 0422-6611340, 6611268.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...