குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா வழங்கக் கோரி அண்ணாநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அமைந்துள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அண்ணா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். மேலும், நாங்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதோடு எங்களுக்கு சொந்தமாக எவ்வித இருப்பிடமும் இல்லாமல் உள்ளோம். 

மேலும், நாங்கள வசிக்கும் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. 

இந்நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தோம்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று கோவை மாவட்ட நொய்யல் கிழக்குப் பிரிவு உதவிப்பொறியாளர் எங்களுடைய இடத்தினை 21 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என அறிவிப்பு கடிதம் கொடுத்தார்.

எங்களுக்கு இதைவிட்டால் வேறு  குடியிருப்புகள் கிடையாது. எனவே நாங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கான பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...