கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 52 வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம் ராதாகிருஷ்ணன் ரோடு, 1வது வீதி பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு அய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் இ-டாய்லட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, உதவி செயற்பொறியாளர் கலாவதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...