ஜி.ஆர்.டி கல்லூரி சார்பில் 'சுவட்ச் மாரத்தான்'


ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'சுவட்ச் மாரத்தான்' என்னும் தூய்மை பணி நிகழ்ச்சி  இன்று காலை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முன்பு நடைபெற்றது. இதனை ஜி.ஆர்.டி கல்வி நிறுவன இயக்குநர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ராமச்சந்திரன் ஒளி தீபம் ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



இந்த தூய்மை பணி நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முதல் தொடங்கி ஆர்.ஜி புதூர் வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாரும் சாலையில் ஓடி சென்றும் பொதுமக்களுக்கு தூய்மையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 1500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழுவாக பிரிந்து கொண்டு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். இப்பணி காலை 7 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இது குறித்து கல்லூரி மாணவி கூறுகையில்; பாரத பிரதமர் அறிவுரையின்படி தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து இப்பணியினை காலை முதல் செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தூய்மை பணியின் மூலம் பொதுமக்களுக்கு எங்களுடைய இந்த விழிப்புணர்வு சென்றடையும். கல்லூரி மாணவர்கள் இப்பணியை ஆர்வத்துடன் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...