கோவை மத்திய சிறப்பு காவல்ப்படை பயிற்சி கல்லூரியில் காவல் துறை ஆணையாளாராக பொறுப்பேற்கும் பி.எஸ்.சவ்ஹான் (ஐஜிபி)


காவல் துறை தலைவர் பி.எஸ்.சவ்ஹான், காவல் துறை ஆணையாளாராக தொப்பம்பட்டியில் உள்ள மத்திய சிறப்பு காவல்ப்படை மத்திய பயிற்சி கல்லூரியில் முதல் முறையாக பொறுப்பேற்க்க உள்ளார்.

இவர் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் ஆபு பயிற்சிக் கல்லூரியில் வந்துள்ளார். பி.எஸ்.சவ்ஹான் 1984-ல் நேரடியாக மத்திய சிறப்பு காவல்படையில் சேர்ந்தார். 

இவரது சொந்த ஊர் ஜோத்பூர் மாவட்டம் இராஜஸ்தான் மாநிலம் ஆகும். பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற இவர் தொடர்ந்து ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். 

பி.எஸ்.சவ்ஹான் தனது 33 வருடத்தில் பஞ்சாப், அசாம், அருணாச்சலப்பிரதேசம், ஸ்ரீநகர் (ஜம்மு- காஷ்மீர்) போன்ற மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.

பி.எஸ்.சவ்ஹான் ஜனவரி 26, 2009-ம் ஆண்டு ஜனாதிபதி விருது கடினமான உழைப்பிற்காகவும் மற்றும் காவல் துறை பதக்கம், உள்துறை பாதுகாப்பு பதக்கம் போன்ற பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

காவலர் அகாடெமியில் பல்வேறு வித பயிற்சி பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார். இவர் பணிநிமித்தத்தின்போது பல்வேறு விதமான பயிற்சிப் பிரிவுகளில் ராணுவம் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளிலும் பற்பல சிறப்புவாய்ந்த பிரிவுகளில் திறம்பட பயிற்சிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மத்திய சிறப்பு காவல்படை பி.எஸ்.சவ்ஹான், மத்திய சிறப்பு பயிற்சி கல்லூரியில் முதல்வராகவும், காவல்துறை தலைவராகவும் கோவை தொப்பம்பட்டியில் பொறுப்பேற்க உள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...