மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது: கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை எனவும், மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈஷா யோக மையத்திற்கு நாளை பிரமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகயம்யையொட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் மூலமாக கோவை வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக செய்த தனது தரப்பு தவறுகளை மறைக்கவே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது. திமுக, அதிமுக என்ற இரண்டு கழகங்களினாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் வராது. எந்த வழியை கடைபிடித்தாலும் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. இந்த இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர். முதல்வர் தனது பொறுப்பை காப்பாற்ற செலுத்தும் கவனத்தை சுகாதாரம், விவசாயத்தின் மீதும் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு தான் முறைப்படி கேட்டு பெற வேண்டும்.

பல மாதங்களாக தமிழக அரசு செயல்படாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை. இத்திட்டம், முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம். மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது  ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க தற்போது சில எதிர்ப்புகள் வந்தாலும்  அந்த பிரச்சணைக்கு நீதிமன்ற வழக்கு மூலமாக தீர்வு காண வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது மட்டும் பிரச்சணைகளுக்கு உயிரோட்டம் தருவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...