ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேசுபவர்கள் ஹிந்து விரோத சக்திகள் என, கோவையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி


கோவையில் அமைந்துள்ள ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், மதவாதி காருண்யா மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுப்போம் என கோவையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு மேப்டியளித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை  மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பணத்திற்காக மகப்பேறு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் உதவியுடன் விவசாயிகளின் கவலைகளை நீக்க ஆய்வு செய்து தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை எதிர்ப்பவர்கள் இந்து விரோத சக்திகள், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மத ரீதியாக பாகுபாடுகள் இல்லை.

காருண்யா பல்கலைக் கழகம் காட்டாறுகளை தடுத்தும், அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி இருப்பதாலும் மலைவாழ் மக்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக் கழகம் மீது பாஜக சட்டப்படி வழக்கு தொடரும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுயமாக சிந்தித்து தைரியமாக செயல்பட வேண்டும். திமுக, அதிமுக கட்சிகள் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த குடும்ப ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...