குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக்கு தீர்வு காண வணிகவரி மற்றும் MSME அமைச்சர்களுக்கு FOCIA கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.


கோவை: குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கவும், தொழில் அமைப்புகளின் பதிவு மற்றும் புதுப்பிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) சார்பில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSME) அமைச்சர் மதன் ராஜா ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

FOCIA ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் மற்றும் சிவசண்முககுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் சார்ந்த சங்கங்கள் மற்றும் கூட்டுநிறுவனங்களின் (Partnership Firms) பதிவுகளை புதுப்பிப்பதில் பதிவு அலுவலகங்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் ஆவணங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டாலும், பின்னர் அதே ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்குமாறு கூறப்படுவதாகவும், அவ்வாறு சமர்ப்பித்த பின்னரும் பதிவுகள் மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து தொலைபேசி, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்படுவதில்லை என்றும், நேரில் சென்று விசாரித்தால் மட்டுமே விளக்கம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். சில பதிவுகள் மென்பொருள் கோளாறுகளால் காணப்படுவதில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருந்தாலும் பல ஆண்டுகளாக பதிவு புதுப்பிக்கப்படவில்லை என கணினியில் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே, நீண்டகாலமாக செயல்பட்டு வரும் தொழில் அமைப்புகளின் பதிவுகளை உடனடியாக புதுப்பித்து வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பதிவுத்துறை அமைச்சரிடம் FOCIA கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், MSME துறை அமைச்சர் மதன் ராஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய இயந்திரங்கள் வாங்கும் தொழில் முனைவோருக்கு 25 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மானியம் பெறுவதற்கான சில நிபந்தனைகள் உண்மையான குறுந்தொழில் முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக FOCIA தெரிவித்துள்ளது.

குறிப்பாக, புதிய இயந்திரம் வாங்கிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் உற்பத்தி திறனை 25 சதவீதம் அதிகரித்துக் காட்டினால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற நிபந்தனையால் பல விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மையங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் அடிப்படையில் செயல்படும் குறுந்தொழில்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரே அளவில் ஆர்டர்கள் கிடைப்பதில்லை என்பதால், உற்பத்தி அதிகரிப்பு தொடர்பான நிபந்தனையை நீக்கி, புதிய இயந்திரங்கள் வாங்கும் குறுந்தொழில் முனைவோருக்கு மானியம் பெற வழிவகை செய்ய வேண்டும் என அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக FOCIA தெரிவித்துள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...