உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


திருப்பூர்: உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.

உச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் சக்தி பூஜை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



கடந்த 31-ந் தேதி சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.



சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு வளர்த்துக் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும் இரவு பொதுமக்கள் பரிவட்டத்துடன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாகாளியம்மனுக்கு சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் காலை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

இரவு கம்பம் பிடுங்கி கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், அபிஷேகம், பூஜையும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, எஸ் அம்மாபட்டி, பொட்டிநாயக்கனூர், ரத்தினம்மாள் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...