தாராபுரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை!

தாராபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (65). ஈரோடு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 8 பவுன் தங்க நகையைக் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (65). இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.



இவர் நேற்று காலையில் 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு ஜீவானந்தம் வந்தார். அப்போது வீட்டின் பின் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.

பிறகு பீரோவிலிருந்த பொருள்களை சரி பார்க்கும் போது துணிகள் கலைந்து கிடந்தது. அதிலிருந்த 8 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஜீவானந்தம் தாராபுரம் குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.



புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து அப்பகுதி உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். ஜீவானந்தம் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அங்கு வந்து வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவிலிருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதன் அருகே உள்ள ஜோதி நகர் பகுதியில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் அதைத் தொடர்ந்து அசோக் நகர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...