முதுமலையில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 22 கிலோ மீட்டர் சவாரி சென்ற பிரதமர் மோடி முதுமலை வளர்ப்பு யானைகளை பார்வையிட்டதுடன், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் பொம்மன், பெள்ளி தம்பதியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



நீலகிரி: பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த பிரதமர் சபாரி செய்ததுடன் ஆஸ்கார் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு வந்தார். மைசூருவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி நேற்று இரவு தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை 6.20 மணியளவில் ஓட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்று ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமன ஹள்ளிக்கு சென்றார்.



பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் சவாரி சென்று வனவிலங்களை பார்வையிட்டார்.



இதை தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.



வாகன சவாரியை முடித்து கொண்ட பின்னர் சுமார் 10.20 மணிக்கு கக்கநல்லா சோதனை சாவடி வழியாக சாலை மார்க்கமாக முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்டார்.



அங்கு பெண் யானைக்கு கரும்பு அளித்த அவர், மூத்த யானை பாகன்களான கிருமாறன், தேவராஜ், குள்ளன் ஆகியோரிடம் காட்டு யானைகளை பிடிப்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் முதுமலையில் T23 புலியை உயிருடன் பிடிக்க உதவியாக இருந்த முதுமலையை சேர்ந்த மீன்காளன், மாதன் உள்ளிட்ட 3 பழங்குடியின வனதுறை ஊழியர்களையும் சந்தித்து பேசினார்.



அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்' ஆவண படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும், ரகு, பொம்மி யானை குட்டிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து முதுமலை தெப்பகாட்டில் இருந்து சாலை மார்கமாக மசினகுடி வந்த அவர், பஜார் பகுதியில் கூடியிருந்த கட்சி தொண்டர்களை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கி கைகளை அசைத்து உற்சாகபடுத்தினார்.



அதே போல ஹெலிகாப்டர் தளத்தில் கூடியிருந்த பொதுமக்களின் அருகே நடந்து சென்று கைகளை அசைத்தார்.



பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...