வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் காயம் - பரபரப்பு!

கோவை வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதில் கையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளியான பாப்பையா என்பவரது மகன் ஆகாஷ்(5) இன்று காலையில் வீட்டின் முன்பு தேயிலை தோட்டம் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றினார்.



இதனையடுத்து, சிறுவனை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...