கோவை கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தம் - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு சிறப்பு தனிப்படை அமைத்துள்ள நிலையில், கோவை கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கனிம வள கொள்ளை குறித்து செய்திகள் வெளியாகியது. இதை தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளது.

இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் தனிப்படை அமைத்தது முதல், கடந்த நான்கைந்து நாட்களாக குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் அள்ளப்படுவது குறைந்திருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்றி தெரிவித்து கடிதம் அளித்த விவசாயிகள், பாலக்காடு கணவாய்க்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் வழக்கமாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயம் சிறப்பாக இருந்தது.

கடந்த ஒரு வருட காலமாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குவாரிகளால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்த சூழலில் கடந்த வாரம் தமிழக அரசு கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிறப்பு தனிப்படைகளை அமைத்திருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குவாரிகளிலிருந்து கனிமவள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளின் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களும் விவசாயிகளும் சற்று நிம்மதி அடைந்திருக்கிறோம்.

அதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல் நிரந்தரமான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...