மே 15-க்குள் சட்ட விரோத பார்களை மூட வேண்டும்..! - கோவையில் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

கோவை குனியமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக இயங்கும் பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மூடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் பார்களை முழுவதுமாக மூட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழக ஆளுநர் நேற்று ஆன்லைன் ரம்மிதடைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எனவே ஆன்லைன் ரம்மியால் சொத்துக்களை இழந்தார்கள். உயிர்களை இழந்தார்கள் போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது.

டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகள் நடைபெறுகிறது. டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறிவைத்து தாக்கும் போக்கு உள்ளது.

ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரால், நியமிக்கப்படுபவர். அரசியல் திட்டங்களுக்கு செயல் கொடுப்பவர்கள் ஆளுநர்கள் தான். ஆளுநர் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது.

மத்திய அரசுக்கு மாறான சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் அரசியல் சாசனத்தை புரியாமல் இருப்பவர்கள் பேசுவது. சட்டமன்றத்திற்குள் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் கூறுவது எல்லாம் ஆபத்தானது.

2021 வரையில் மோடியை இலக்காக வைத்து மோடி வந்த போது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் தற்போது அதனை நிறுத்தி விட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே சென்று மோடியை கை தூக்கி நிற்பது இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா.?.

இது குறித்து இஸ்லாமிய கிறிஸ்துவ சகோதரர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேலும் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம்.

ஆளுநரை மிரட்டுவதை விட்டு விட வேண்டும். ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை. ரம்மிக்கும், மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும்.

பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. டாஸ்மாக் கடைகளை போல பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது.

எத்தனை சட்ட விரோத பார்கள் நடைபெறுகிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும். மேலும் மே 15க்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மூடுவோம். 2வது டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். 3வதாக மது தயாரிப்பு ஆலைகளை மூட போராட்டம் நடத்துவோம்.

சட்ட விரோத மது விற்பனையால் வரும் பணம் தனி நபர் கஜானாவிற்கு போகிறது. பல இடங்களில் சட்டவிரோத பார்கள் நடைபெறுகிறது. டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச உள்ளேன். மேலும் திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...