அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐபிஎல் போட்டிகளை காண பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி - சுவாரஸ்ய பதிலளித்த உதயநிதி!

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொரடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ஐபிஎல் தலைவராக உள்ள ஜெய்ஷாவிடம் பேசி எங்களுக்கும் வாங்கி கொடுங்கள் என்றார்.



சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது. தற்போது அதிமுக எம்.எல்.ஏ. -க்களுக்கு மட்டும் கொடுப்பதில்லை. எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை நடத்துபவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான்.

அவரிடம் பேசி ஒரு எம்எல்ஏக்கு 5 டிக்கெட் வாங்கி குடுங்க, காசு கொடுத்து வாங்கி கொள்ள நாங்கள் தயார், என்று கலகலப்பாக பதிலளித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...