கோவை அருகே தண்ணீர் தொட்டியில் யானை குட்டி சடலம் மீட்பு

கோடைக் காலம் துவங்கியதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில் கோவை பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்ட கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானை குட்டி இறந்த நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை பகுதியில், அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.

இதையடுத்து தோட்டத்திலிருந்த பணியாளர்கள் பார்த்த போது, அதில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக வனத்துறை ஊழியர்கள் இறந்த யானை குட்டியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 அடி ஆழம் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக வந்த போது, அதில் சிறிய குட்டி தவறி விழுந்திருக்கலாம் எனவும், குட்டி விழுந்து சுமார் 3 நாட்களாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை குட்டியின் உடலை மீட்டவுடன், நாளை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...