பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிராந்தி குமார் திடீர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக சுதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



இதனையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.



அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:



கோவை மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இணை நோய் உள்ளவர்கள் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...