தரமற்ற முருங்கை நாற்றுகளை கொடுத்து ஏமாற்றிய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் - பல்லடத்தில் விவசாயி குற்றச்சாட்டு!

பல்லடம் அருகே செட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையிடம் இருந்து பெறப்பட்ட 1500 முருங்கை நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் பூ பூக்காமல் இருப்பதால் தரமற்ற நாற்றுகளை கொடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக விவசாயி ஈஸ்வரன் தோட்டக்கலைத் துறையாக அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே பொங்கலூரில் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்பட்ட 1500 முருங்கை நாற்றுகள் ஒன்றரை வருடம் ஆகியும் காய்க்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொங்கலூர் தோட்டக்கலை துறை சார்பில் 50 விவசாயிகளுக்கு இலவசமாக முருங்கை நாற்று, மாஞ்செடி, கொய்யாசெடி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

இதில் செட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவருக்கு 1500 முருங்கை நாற்றுகள் வழங்கியுள்ளனர். சொட்டுநீர் பாசன முறையில் முருங்கை நாற்றுகளை பயிரிட்டு மூன்று ஏக்கருக்கு ரூபாய் 90 ஆயிரம் வரை செலவு செய்து வளர்த்து வந்துள்ளார்.



இந்த நிலையில் முருங்கை நாற்றுகள் நடவு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் ஒரு செடியில் கூட பூ பூக்காமல் இருந்ததால் காய்ப்பு திறன் இல்லை என தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விவசாயி ஈஸ்வரன் முறையிட்டுள்ளார்.



மேலும் இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனக்கு சொந்தமான மீதமுள்ள நிலத்தில் தனியார் நிறுவனத்தின் முருங்கை விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். தனியாரில் வாங்கிய முருங்கை விதைகள் நல்ல காய்ப்பு திறனோடு உள்ளதாகவும், நல்ல லாபம் அளித்துள்ளதாகவும் விவசாயி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.



இதனிடையே, தரமற்ற போலி முருங்கை நாற்றுகளை கொடுத்ததால் ஏமாற்றம் அடைந்த விவசாயி ஈஸ்வரன் காய்ப்பு இல்லாத முருங்கை செடிகளை அழிப்பதற்கும் 20,000 வரை செலவாகும் என்பதால் செடிகளை அப்படியே விட்டு வைத்துள்ளார்.



இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயி ஈஸ்வரன் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுபோன்று தரமற்ற போலியான விதைகளையும் நாற்றுகளையும் கொடுத்து விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம் எனவும் தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரியிடம் கேட்டதற்கு விவசாயி ஈஸ்வரனின் நிலத்தில் மண் தரமாக இல்லை எனவும் முருங்கை செடிகள் காய்ப்பு பிடிக்க முறையான வழிமுறைகளை கூறியுள்ளதாகவும் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...