கோவையில் குறைதீர் மனுநாள் கூட்டம் - 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு!

கோவை அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மனு நாள் முகாம் நடைபெற்றது. இதில், 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திபாடி குமார் தலைமையில் குறைதீர் மனு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுக்கு கீழ்ப்பகுதியில் பயனீர் மில் ரோடு முதல் E2 காவல் நிலையம் வரை மழைநீர் வடிகால் பாதை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்களாக அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யக் கோரியும், அதேபகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க கோரியும் 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...