கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத் தீ!

கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ பற்றியெரிந்து கொண்டுள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக நீலகிரி மற்றும் சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து கூடுதல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், 40 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மூங்கில் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டது.



தற்போதுவரை, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்ட நிலையில், சிறுமுகை மற்றும் நீலகிரி வனச்சரகத்தில் இருந்து கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் குழு தீயை அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் திசைக்கு ஏற்ப தீயை அணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...