தமிழ் புத்தாண்டையொட்டி கோவை மார்க்கெட்டுகளில் பூக்கள் விற்பனை ஜோர்

தமிழ்புத்தாண்டையொட்டி கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வந்து, பூ,பழம், பூஜை பொருட்கள் வாங்கிச் சென்றதால் விற்பனை களைக்கட்டியதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


கோவை: டி.கே.மார்க்கெட்டில் புத்தாண்டையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சாமி படங்களுக்கு மாலை அணிவித்து, கனிகள் உள்பட பல்வேறு பொருட்களை படைத்து சாமி கும்பிடுவது வழக்கம். இதையடுத்து பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பூஜைக்கு தேவையான பழம், பூக்கள் வாங்கி வருகின்றனர்.

கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர். அவர்கள் அங்கு புத்தாண்டுக்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான பழங்கள், காய்கனிகள் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்கினர். மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் வாங்கினர்.



இதேபோல் கோவை பூமார்க்கெட்டில் காலை முதலே பூக்கள் விற்பனை களைகட்டியது.



வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



மக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தமிழ்புத்தாண்டையொட்டி கோவையில் பழங்கள், பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது.

மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.



கோவை மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

மாம்பழம்(செந்தூரம்)-ரூ.120, மல்கோவா மாம்பழம்-ரூ.180, சாத்துகுடி-ரூ.70, கொய்யா-ரூ.80, மாதுளை-ரூ.180, ஆரஞ்சு-ரூ.100, திராட்சை-ரூ.100, ஆப்பிள்-ரூ.200, அன்னாசி-ரூ.60, எலுமிச்சை-ரூ.120க்கு விற்பனையானது. மல்லி பூ-ரூ.800, செவ்வந்தி-ரூ.320, தாமரை 1-ரூ.10, ரோஜா(ரெட்)-ரூ.160, ரோஜா(கலர்)-ரூ.240, அரளி-ரூ.320, சம்பங்கி-ரூ.240, முல்லை-ரூ.800, கனகாம்பரம்-ரூ.400, செண்டுமல்லி-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...