கோவை வடவள்ளி அருகே 8.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை - 4 பேர் கைது!

வடவள்ளி அருகேயுள்ள அஜ்ஜனூர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த தேனியை சேர்ந்த மனோஜ்குமார்(33), மார்க்கண்டன் (33), பிரவீன் (31), தினேஷ் (27) ஆகியோரை கைது செய்த போலீசார், 8.5 கிலோ கஞ்சா மற்றும் 4 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் இன்று (15.04.2023) வடவள்ளி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், வடவள்ளி அடுத்த அஜ்ஜனூர் (ஸ்ரீ ராம் கார்டன்) பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் (33), மார்க்கண்டன் (33), பிரவீன் (31) மற்றும் தினேஷ் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.1.1 லட்சம் மதிப்பிலான சுமார் 8.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும், 77081-00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...