உக்கடம் அருகே சாலையோரங்களில் நிற்கும் இருசக்கர வாகனங்களில் தொடரும் பெட்ரோல் திருட்டு!

உக்கடம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உக்கடம் அருகே சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையம் அருகேயுள்ள உக்கடம் காவல் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, இருசக்கர வாகனத்தை இயக்க முயற்சித்த போது முடியவில்லை. இதையடுத்து பார்த்த போது, பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காலையில் தான் 3 லிட்டர் நிரப்பிக்கொண்டு வந்ததாகவும், ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார். கோவையில் அண்மை காலமாக இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது, உக்கடம் பேருந்து நிலையமானது 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும்.

கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் பெட்ரோல் திருட்டு தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...